மஹாராஷ்டிராவில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 8 பேர் பலி

மும்பை: மஹாராஷ்டிராவில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ள அம்பேனாலி காட் அருகே, ஸ்கார்பியோ கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் இரண்டு பேர் உடல்களை மீட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது.

உயிரிழந்தவர்கள் அன்ஷ் சமீர் சவான், 19, ரித்தேஷ், 22, ஜிதேந்திர லோகண்டே,20, ஆனந்த் ஷிங்டே, 21,நிகில், 25, மகேஷ் அனில் பவார்,25, ஆதித்யா அசோக் ,21, ராஜேஷ் அசோக் கட்கர், 35 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மலைப்பாதையில் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இரவு பயணங்களால் அடுத்தடுத்து விபத்து நடக்கிறது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்து நடை பெறும். இந்த விபத்து இரவு 8 மணிக்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement