சிங்கப்பூர், பிரிட்டன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம்
புதுடில்லி: நம் நாட்டில் தொழில் தொடங்க, பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அவ்வகையில் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், தென்கொரியா, ஜெர்மனி நிறுவனங்கள் இதில் முன்னணி வகிக்கின்றன. இதுகுறித்து மத்திய கம்பெனி விவகாரங்கள் அமைச்சக தரவுகள் கூறியதாவது:
கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த நிதியாண்டில் அதிக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் தென்னாப்ரிக்கா, கானா, உஸ்பெகிஸ்தான் நாட்டு நிறுவனங்கள் முதல் முறையாக இந்தியாவில் அடியெடுத்து வைத்துள்ளன.
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் தொழில் தொடங்க பதிவு செய்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 101 ஆக உயர்ந்தது. இது, 2024-25ல் 57 ஆகவும், 2016-17ல் 103 ஆகவும் இருந்தது. கம்பெனிகள் சட்டம் 2013ன்படி வெளிநாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாகவோ அல்லது தங்களது முகவர் வாயிலாகவோ தொழில் தொடங்க முடியும்.
நாட்டின் நேரடி அன்னிய முதலீட்டில் முதல் 10 இடங்களை சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன. 2025-26 நிதியாண்டின் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட மொத்த நேரடி அன்னிய முதலீட்டில் 62.40 சதவீதம் இந்நாடுகள் வாயிலாகவே இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறு அத்தரவுகள் கூறுகின்றன.
@block_B@ இந்தியாவில் தொழில் தொடங்க பதிவு செய்த நாடுகள் நாடு 2025-26 2024-25 சிங்கப்பூர் 13 7 அமெரிக்கா 10 6 பிரிட்டன் 9 4 ஜெர்மனி 8 1 தென்கொரியா 8 4 ஜப்பான் 7 8block_B
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி