மதமாற்றம் செய்ய யாருக்கும் உரிமையில்லை: அமித் ஷா எச்சரிக்கை
புதுடில்லி: பொது சிவில் சட்டம் பழங்குடியினரை பாதிக்காது. மற்றொரு நபரின் மதநம்பிக்கையை கட்டாயத்தின் பேரில் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை.' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக பழங்குடியின மக்களுக்காக போராடிய தியாகி பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் ஆண்டைக் குறிக்கும் வகையில் நடைபெற்ற பழங்குடியின மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசியதாவது; பொது சிவில் சட்டம் பழங்குடியினரை எந்த வகையிலும் பாதிக்காது. இது குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம்.பாஜ ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்போது, பழங்குடியின சமூகங்களை அதன் வரம்பிற்கு வெளியே வைப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொது சிவில் சட்டம் எந்தவொரு பழங்குடியின சகோதர, சகோதரிகளின் பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் தலையிடாது. நக்சல் வன்முறை காரணமாக பல ஆண்டுகளாக பழங்குடியினரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு நக்சல் பிரச்னையிலிருந்து விடுபட்டு வருகிறது.
பழங்குடி மக்களை மதம் மாற்றுவதற்கு ஆசைவார்த்தை அல்லது தூண்டுதல்களைப் பயன்படுத்தக் கூடாது. மற்றொரு நபரின் மதநம்பிக்கையை கட்டாயத்தின் பேரில் மாற்றுவதற்கு எவருக்கும் உரிமை இல்லை, என்றார்.
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி