66 பேருக்கு பத்ம விருதுகள்; இன்று வழங்கி கவுரவிக்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
புதுடில்லி: டில்லி ஜனாதிபதி மாளிகையில் 66 பேருக்கு பத்ம விருதுகளை இன்று (மே 25) திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்கிறார். அவர் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண், 58 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குகிறார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல் படுவோரை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது.
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்துக்கு முந்தைய நாள், பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டுக்கான பத்ம விருதுகள், தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் உட்பட மொத்தம் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று (மே 25) ஜனாதிபதி மாளிகையில் ஞானதந்திர மண்டபத்தில் நடைபெறும் விழாவில், முதல்கட்டமாக 66 பேருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம விருதுகளை வழங்குகிறார். மீதமுள்ள நபர்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண், 58 பத்மஸ்ரீ விருதுகளை வழங்குகிறார். பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபிஆர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பத்ம பூஷண் விருது நடிகர் மம்மூட்டி, டென்னிஸ் வீரர் விஜய் அம்ரித்ராஜ், தமிழகத்தை சேர்ந்த இரைப்பை, குடல் மருத்துவ நிபுணர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி, ஈரோட்டைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் உள்ளிட்ட 13 பேர் விருதுகளை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி