கோடை வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு
சென்னை: மாவட்ட வாலிபால் சங்கத்தின் கோடைக்கால பயிற்சி முகாம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது; பயிற்சி முகாமில் 100 பேர் பயன்பெற்றனர்.
சென்னை மாவட்ட வாலிபால் சங்கத்தின் இலவச கோடைக்கால வாலிபால் பயிற்சி முகாம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில், கடந்த 5ம் தேதி துவங்கிய இந்த முகாமில், 12 வயது முதல் 15 வயதுடைய சிறுவர் - சிறுமியர், 100 பேர் ஆர்வமுடன் பங்கேற்று, பயிற்சி பெற்றனர்.
தினமும் மாலை 4:00 முதல் 6:00 மணி வரை நடந்த பயிற்சியில், அடிப்படை திறன்கள் முதல், போட்டி நுணுக்கங்கள் வரை பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுத்தனர். முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவாக பால் மற்றும் முட்டை வழங்கப்பட்டது.
நிறைவு விழாவில், தமிழ்நாடு மாநில வாலிபால் சங்க ஆயுள் தலைவர் ஆர்.அர்ஜுன் துரை, சிறப்பு விருந்தினர்களாக எஸ்.டிஏ.டி., பொது மேலாளர் எல்.சுஜாதா பங்கேற்று, பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
மேலும்
-
விஜய்க்கும், புதிய அரசிற்கும் 6 மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்கணும்; சொல்கிறார் துரை வைகோ
-
பிரதமரை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்: பா.ஜ., வலியுறுத்தல்
-
தொகுதி மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டதால் ராஜினாமா!
-
பாகிஸ்தான் பயங்கரவாதமே இந்தியாவின் பெருங்கவலை: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
-
போதிய தண்ணீர் இல்லாததால் பயிர் சாகுபடி பாதியானது
-
30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவிகள்