கோடை கிரிக்கெட் தொடர் காஞ்சி அணி வெற்றி

காஞ்சிபுரம்: அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அரசு பள்ளி மைதானத்தில் நடந்த கோடை கிரிக்கெட் தொடரில், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த ஆண்டிமடம் அரசு பள்ளி மைதானத்தில், ராயல் ஸ்போர்ட்ஸ் சார்பில், கோடை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடந்தது.

இதில், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியும், ஜெயங்கொண்டம் ராயல் ஸ்போர்ட்ஸ் அணியும் மோதின. மூன்று போட்டிகளிலும், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணிக்கு ராயல் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகள், ஆண்டிமடம் விளையாட்டு ஆர்வலர்கள் கோப்பையை வழங்கி பாராட்டினர்.

Advertisement