சக பெண் ஊழியரை பலாத்காரம் செய்தவர் கைது

சென்னை: : கே.கே.நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கே.கே.நகரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணி செய்து வருகிறார். அதே அலுவலகத்தில், ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்த அமைந்தகரையைச் சேர்ந்த அண்ணாதுரை, 56 என்பவருடன் நட்புடன் பழகி வந்தார்.

கடந்த செப்., 30ம் தேதி, அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில், அப்பெண்ணை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து, அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில், அப்பெண் உடல்நலக்குறைவு காரணமாக கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை தகவலின்படி, வடபழனி மகளிர் போலீசார் அப்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர்.

பின், உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி கே.கே.நகர் போலீசார் அண்ணாதுரையை நேற்று கைது செய்தனர்.

Advertisement