விஜய்க்கும், புதிய அரசிற்கும் 6 மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்கணும்; சொல்கிறார் துரை வைகோ
பரமக்குடி: ''முதல்வர் விஜய்க்கும், புதிய அரசிற்கும் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்,'' என ம.தி.மு.க., முதன்மை செயலாளர் துரை தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், அவர் அளித்த பேட்டி: தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு, தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால், தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை தவிர்க்க, காங்., கம்யூ., உள்ளிட்ட கட்சிகள், த.வெ.க., அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரவேற்கத்தக்கது.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் என் மீது நட்பு பாராட்டக் கூடியவர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'த.வெ.க., ஆட்சிக்கு இடையூறாக இருக்க மாட்டோம்', என்று கூறியுள்ளார்.
தமிழக அரசுக்கு, 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்த ஆட்சி, நன்கு செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். செயல்பாடுகள் சரி இல்லாவிட்டால், எதிர்க்கட்சி என்ற முறையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
தி.மு.க., அ.தி.மு.க., இணைந்து ஆட்சி அமைத்தால் கண்டிப்பாக மக்கள் ஏற்க மாட்டார்கள். இனி வரும், அனைத்து தேர்தல்களிலும், ம.தி.மு.க.,வின் சின்னத்தில் தான் போட்டியிடுவோம். வேறு எந்த கட்சி சின்னத்திலும் போட்டியிட மாட்டோம். இது குறித்து பொதுக்குழுவில் பேசி முடிவெடுப்பேன். விஜய் தற்போது தான் முதல்வராக பதவியேற்று உள்ளார்.
சமீபத்தில் தான் முழுமையாக அமைச்சரவை நிரப்பப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். நிர்வாக ரீதியாக மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. நாம் கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும். முதல்வர் விஜய்க்கும், புதிய அரசிற்கும் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதெல்லாம் நமக்கு ஓவரா படலையா? பேசாம இருக்கனும்.
ஆறு மாசத்திற்கப்புறம் என்ன செய்ய போகின்றீர்கள் .
நீயாருனோ தெரியாது
துண்டு போட ரெடி ஆகிட்டான்யா துரைவாலு
அந்த ஆறு மாதத்திற்குள் தவெக இன்ஸ்ட்டாகிராம் வாயிலாக அசுர வளர்ச்சி அடைந்து விடுவார்.
நாட்டு நலனுக்காக மோடிஜி இன்ஸ்ட்டாகிராமை சத்தமில்லாமல் தடை செய்ய வேண்டும்.
100% சரிமேலும்
-
ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 29ம் தேதி மகா சம்ப்ரோஷணம்
-
டாஸ்மாக் கடையை மூடக்கோரி மக்கள் மனு
-
தாளவாடியில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சென்ற சிறுவன் உடல் மீட்பு
-
இன்று ஈரோடு மாநகராட்சி கூட்டம்மாறிய அரசியல் களத்தால் பெரும் எதிர்பார்ப்பு
-
எம்.எல்.ஏ., வெற்றி சான்றுடன் பறந்தவர்பதவியை துறந்து த.வெ.க.,வில் ஐக்கியம்
-
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு