30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் மாணவிகள்

மதுரை: மதுரை சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1996ல் பிளஸ் 2 படித்த மாணவிகள் 30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து மலரும் நினைவுகளை வெளிப்படுத்தி கொண்டாடினர்.

தாளாளர் ஜனரஞ்சனி பாய் தலைமை வகித்தார். தலைமையாசிரியை ராஜேஸ்வரி, கவுரவ காரியதரிசிகள் விஜயலட்சுமி, கலைவாணி முன்னிலை வகித்தனர். 1996ல் படித்து, தற்போது பல நாடுகள், மாநிலங்களில் இருந்தும் இவ்விழாவிற்கு பங்கேற்றவர்கள் தங்கள் ஆசிரியர்களை கவுரவித்து நினைவு பரிசு வழங்கி ஆசி பெற்றனர். 

முன்னாள் மாணவிகள் திரட்டிய நிதி ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர். முன்னாள் மாணவிகள் சி.டி. ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி, சுபாஷினி, ரதிதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Advertisement