வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகினறனர்.

விழுப்புரம் அடுத்த வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்க பாஷியம் மனைவி அம்பிகா, 55; இவரது மகள், மகன் ஆகியோர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த அம்பிகா, இரு தினங்களுக்கு முன் வீட்டை பூட்டிக்கொண்டு, சென்னையில் உள்ள பிள்ளைகளை பார்க்க சென்றார்.

நேற்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சென்னையில் உள்ள அம்பிகாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை திருடு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் னாள்ள சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement