விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு; குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு
நமது நிருபர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்து துாத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவி மாயமானார். பிறகு காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் மாணவியின் உடல் சடலம் மீட்கப்பட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் கடந்த மார்ச் 10ம் தேதி சட்டசபை தேர்தலுக்கு முன்பு நடந்ததால் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்த வழக்கில் தர்ம முனீஸ்வரனை போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது.மொத்தமாக 71 சாட்சிகளிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
கடந்த இரண்டு மாதமாக நடந்த விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று (மே 25) தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தா தீர்ப்பு அளித்தார். தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதித்து துாத்துக்குடி போக்சோ நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
பிரத்யேக வீடியோ!
தூத்துக்குடி மாணவி கொலை; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை குறித்து தினமலர் யூடியூப் மற்றும் வெப்சைட்டில் பிரத்யேக வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (35)
D Natarajan - CHENNAI,இந்தியா
25 மே,2026 - 18:42 Report Abuse
இரண்டு மாதங்களில் தீர்ப்பு , அதுவும் தூக்கு தண்டனை. கடவுளே இது நியாயமா , இந்த தண்டனை நிறைவேற சந்தேகம் குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும். 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
25 மே,2026 - 17:22 Report Abuse
இந்த தீர்ப்பு வெறும் ஏட்டுச்சுரைக்காயா இல்லையா என்று அது நிறைவேற்றப்பட்டவுடன்தான் தெரியும்??? 0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
25 மே,2026 - 17:11 Report Abuse
இரண்டு மாதங்களில் தீர்ப்பு , அதுவும் தூக்கு தண்டனை. கடவுளே இது நியாயமா , இந்த தண்டனை நிறைவேற சந்தேகம் குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும். 0
0
Reply
அப்பாவி - ,
25 மே,2026 - 16:49 Report Abuse
ஆண்டவா போக்சோ வின் இந்த நல்ல தீர்ப்பை புண்ணாக்கு தீர்ப்பாக நீதி மன்றங்கள் மத்தாம இருக்க அருள் புரிவாய். 0
0
Reply
Ganesun Iyer - ,இந்தியா
25 மே,2026 - 16:38 Report Abuse
தர்ம முனிஸ்வரன் மேல்முறையீடு போய் வெளிய வந்து ஆதவ் முனீஸ்வரன்னு பெயரை மாத்தி தேர்தலில் போட்டியிட போறான். 0
0
Reply
Shekar - ,
25 மே,2026 - 16:29 Report Abuse
நம்ம நாட்டுல தூக்கு தண்டனையா? ஹா... ஹா, அடுத்த ஆண்டு தீபாவளி இவன் தன் வீட்டுல கொண்டடுவான். அடுத்த கோர்ட் சாட்சி சரியில்லைன்னு விடும். இவன மாதிரி பொருக்கிகளுக்கு என்னைக்கி தண்டனை கிடைச்சிருக்கு. 0
0
Sathish Subramanian - ,இந்தியா
25 மே,2026 - 17:05Report Abuse
விஷயம் தெரியாத உன் வெங்காய கருத்தே எவன் கேட்டான் 0
0
Reply
Chandhra Mouleeswaran MK - Tiruppur,இந்தியா
25 மே,2026 - 15:58 Report Abuse
போக்ஸோ நீதி மன்றத்திற்கு இந்தமாதிரி உடனடித் தண்டனைகளை நிறைறைவேற்றும் அதிகாரத்தையும் தரவேண்டும் 0
0
Reply
N.Purushothaman - Cuddalore,இந்தியா
25 மே,2026 - 15:35 Report Abuse
தண்டனைக்கு முன் அவனிடம் சமுதாயத்திற்கு ஒரு செய்தி சொல்லும் கருத்தை ஒளிப்பதிவு செய்து அதை ஒளிபரப்பு வேண்டும் ...இந்த குற்றத்தை செய்ய அவனை தூண்டியது, அதற்கு பின் அவனின் மன நிலை எப்படி இருந்தது , அந்த செயலால் அவன் குடும்பத்திற்கு எத்தகைய பாதிப்பு ,மன உளைச்சல் ஏற்பட்டது ,அவன் சார்ந்த ஊர் மக்களின் மன நிலை,இதர தீய பழக்கங்கள் குறிப்பாக போதைக்கு அடிமை , போன்ற அனைத்தும் அதில் விளக்க வேண்டும் ... அவனின் ஒப்புதலோடு அவனின் மரண தண்டனையை நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம் ... 0
0
Reply
Naga Subramanian - Kolkatta,இந்தியா
25 மே,2026 - 15:18 Report Abuse
சவூதியைப் போன்று, மக்கள் முன்பு தண்டனை அளிக்க வேண்டும். அப்பொழுதுதான், இவ்வாறு நடப்பது சற்றே குறையும். 0
0
Reply
Venkatesan - ,
25 மே,2026 - 14:45 Report Abuse
உடனே தண்டனையை நிறைவேற்ற வேண்டும் 0
0
Reply
மேலும் 24 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement