டாஸ்மாக் கடையை மூடக்கோரி மக்கள் மனு
ஈரோடு:விஜயமங்கலம், கள்ளியம்புதுார் கிராம மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது: கள்ளியம்புதுாரில் டாஸ்மாக் கடை (எண்: 3935) இயங்கி வருகிறது. கடையை மூட வேண்டும். இதுகுறித்து முதல்வரின் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
கடைக்கு அதிக எண்ணிக்கையில் மது குடிப்போர் வந்து செல்வதால், போக்குவரத்து இடையூறாகிறது. அடிக்கடி விபத்து, சண்டை நடக்கிறது. கடை பகுதியில் அங்கன்வாடி, மாரியம்மன் கோவில், பஸ் நிறுத்தம், ரேஷன் கடை இயங்குகிறது. இங்கு செல்வோர் பாதிக்கின்றனர். எனவே இக்கடையை அகற்ற வேண்டும். இவ்வாறு கூறினர்.
கவுந்தப்பாடியில் ஆர்ப்பாட்டம்கவுந்தப்பாடி பைபாஸ் சாலையில், அருள்தரும் நீள்நெடுங்கண்ணி அம்மை உடனமர், அண்டம் முழுதுடையார் கோவில் உள்ளது. இதன் அருகே டாஸ்மாக் கடை (எண்: 3809) இயங்குகிறது. கடைக்கு வரும் குடிமகன்களால், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே கடையை அகற்றக்கோரி, கோவில் வளாகத்துக்குள் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று காலை குவிந்தனர்.
பின் கோவில் முக்கியஸ்தர்களுடன் மக்கள் ஒன்று சேர்ந்து, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஊர்வலமாக சென்று, கடை முன் நின்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பவானி தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் கவுந்தப்பாடி போலீசார், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கவே கலைந்து சென்றனர்.
மேலும்
-
கேபிள் கார் கோளாறால் அந்தரத்தில் தவித்த 300 பேர்; பத்திரமாக மீட்டது மீட்பு படை
-
சிறைக்குள் கஞ்சா பந்து வீசியது குறித்து விசாரணை
-
17 இன்ஸ்பெக்டர்கள் சேலத்துக்கு இடமாற்றம்
-
தப்பிய ஆயுள் தண்டனை கைதியை கோவை சிறைக்கு மாற்ற பரிசீலனை
-
அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகள் மீது அதிகாரி புகார்
-
மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு