17 இன்ஸ்பெக்டர்கள் சேலத்துக்கு இடமாற்றம்
சேலம்: தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், 17 இன்ஸ்பெக்டர்கள் சேலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சேலத்தில் பணியாற்றிய, 20 பேர் இதர மாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டு சேலம் மாநகர் கமிஷனர் அனில்குமார்கிரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி இன்ஸ்பெக்டர்கள் சின்னதங்கம், சந்திரகலா, அம்பிகா, கலைவாணி, ஜெகநாதன், பால்ராஜ், கார்த்திகேயன், சிவகாமி, சிவசங்கரன், இந்திரா, பாபு சுரேஷ்குமார், சாரதா, மணிவண்ணன், பிரகாஷ், சதீஷ்குமார், செல்வராஜ், கிட்டு என, 17 இன்ஸ்பெக்டர்கள் சேலம் மாநகருக்கும், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் பாலாஜி, ஆட்டையாம்பட்டிக்கும், சந்திரசேகரன், சேலம் டவுன் குற்றப்பிரிவு, கிரேடு 2 பிரபு மாநகர் ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர, இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, சங்கீதா, பத்ரூன்நிஷா பேகம், சகாதேவன், பிரேமா ஆகியோர் திருப்பூர் மாநகருக்கும், சாவித்திரி, பத்மாவதி, காந்திமதி, இந்திராணி, கோவிந்தராஜன், நடராஜன் ஆகியோர் சேலம் சரகத்துக்கும், ருக்மணி, பாஸ்கரன், முருகராஜா கோவை சரகத்துக்கும், பத்மாவதி கோவை மாநகருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்டையாம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்லம், தென் மண்டலத்துக்கும், ஆட்டையாம்பட்டி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பழனி, சென்னை ஆவடி, சேலம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி ஆகியோர், சி.ஐ.டி., சென்னை குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.