தப்பிய ஆயுள் தண்டனை கைதியை கோவை சிறைக்கு மாற்ற பரிசீலனை

சேலம்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் முகமது உசேன், 36, இவர் திருட்டு, கொள்ளை, பாலியல், போக்சோ உள்ளிட்ட, 35 வழக்கில் தொடர்புடையவர். அதில் திருச்சியில் தாய், மகளை கட்டி போட்டு பலாத்காரம் செய்த வழக்கில் இவருக்கு, 100 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். மூலநோய் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த, 9ம் தேதி இரவு மருத்துவமனையில் இருந்த தப்பினார். 13 நாட்களுக்கு பிறகு விருதுநகரில் போலீசார் நேற்று முன்தினம் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் முகமது உசேனை, சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை சிறைக்கு மாற்ற சிறை எஸ்.பி., வினோத் நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement