அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகள் மீது அதிகாரி புகார்
ஓமலுார்: குத்தகை காலம் முடிந்த பின் அனுமதியின்றி செயல்பட்ட குவாரிகள் மீது, நடவடிக்கை எடுக்ககோரி கனிமவளத்துறை சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில், சுரங்கத்துறையில் பணியாற்றி வரும் உதவி புவியியலாளர் அரவிந்த், 31. கடந்த ஏப்.,9ல் தீவட்டிப்பட்டியில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்தார். அப்போது, குத்தகை காலம் முடிந்த பின்பு, தனலட்சுமி புளுமெட்டல் நிறுவனம், 37,800 ரூபாய் மதிப்புள்ள சாதாரண கற்களை வெட்டி எடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அதன் உரிமையாளர் சுகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போல், காடையாம்பட்டி தாலுகா, வேப்பிலை கிராமத்தில் ஆய்வு செய்த போது, குத்தகை காலம் முடிந்த பின், 56,700 ரூபாய் மதிப்புள்ள சாதாரண கற்கள் வெட்டி எடுத்த, அய்யனாரப்பன் புளூ மெட்டல்ஸ் நிறுவன உரிமையாளர் ரத்தினம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று, தீவட்டிப்பட்டி போலீசில் அரவிந்த் புகார் அளித்துள்ளார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.