குறைதீர்க் கூட்டம்
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது.
இதில் மக்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.
கலெக்டர், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். டி.ஆர்.ஓ., ஆனந்தி, கலெக்டர் நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா, அரசு துறை அலுவலர்கள், மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement