450 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்
மதுரை: மதுரை செல்லுார் மேலத்தோப்பில் எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவுபடி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.ஐ., அன்புதாசன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மினி சரக்கு ஆட்டோவில் முனிச்சாலை பாலகிருஷ்ணன் 28, என்பவர் கடத்தி வந்த 450 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
விசாரணையில் அருண்பாண்டி அருண்ராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோரிடமிருந்து ரேஷன் அரிசியை பெற்று கால்நடை தீவனத்திற்காக கடத்திச் சென்றது தெரிந்தது. ரேஷன் கடை எண் ஏ1437 ல் பணிபுரியும் விற்பனையாளர் கோவிந்தராஜூக்கும் இதில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement