நரசிம்ம பெருமாள் கோவில் தேர் துாய்மை பணி தீவிரம்

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் வைகாசி பிரம்மோத்சவம் விமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான பிரம்மோத்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடக்க உள்ளது.

இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் மூடப்பட்டிருந்த தேரின் கூரை, பக்கவாட்டு தகடுகள் அகற்றப்பட்டு, தேரில் உள்ள சிற்பங்களுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், நான்கு மாடவீதிகளிலும் தேர் செல்வதற்கு ஏற்ப வழி சீரமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

Advertisement