சந்தை துளிகள்

ரூ.40,000 கோடி ஆர்டரால்ரயில்வே பங்குகள் உயர்வு


இந்திய ரயில்வேயிடமிருந்து, கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டர் குறித்த தகவலால், பங்குச்சந்தையில் நேற்று ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் 10 சதவீதம் வரை உயர்ந்தன.
அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 1 லட்சம் சரக்கு ரயில் பெட்டிகளை கொள்முதல் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டிலேயே முதற்கட்டமாக ஆர்டர்கள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.




ஹெச்.எப்.சி.எல்., பங்கு36 நாளில் 140% உயர்வு


டெலிகாம் மற்றும் பாதுகாப்பு துறையில் செயல்படும் 'ஹெச்.எப்.சி.எல்.,' நிறுவனத்தின் பங்குகள், கடந்த மார்ச் மாத குறைந்தபட்ச விலையான 67 ரூபாயிலிருந்து, அடுத்த 36 வர்த்தக நாட்களில் 140 சதவீதம் உயர்ந்துள்ளன.
நேற்று மட்டும் இந்நிறுவனத்தின் பங்குகள் கிட்டதட்ட 10 சதவீதம் வரை உயர்ந்து, 163 ரூபாயில் நிலைகொண்டன. தொடர்ச்சியான ஆர்டர்கள், வலுவான காலாண்டு நிதிநிலை முடிவுகள், பாதுகாப்பு உற்பத்தி ஆலை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட காரணங்களால், இந்நிறுவன பங்குகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



@quote@ 450% ஏற்றம் கண்ட ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் quote



'ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ்' நிறுவன பங்குகள், நேற்று மட்டும் 5 சதவீதம் உயர்ந்து, 463 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளன. தொடர்ந்து 2வது நாளாக இந்நிறுவன பங்குகள் 'அப்பர் சர்க்யூட்' அடித்துள்ளன.
கடந்த ஜனவரி 27 அன்று, 84.60 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையில் இருந்த இப்பங்கு, தற்போது வரை கிட்டத்தட்ட 450 சதவீதம் உயர்வு கண்டுள்ளது.
ஏ.ஐ., தொழில்நுட்பத்திற்கான தரவு மையங்களை அமைப்பதற்காக, 'ஹைப்பர்ஸ்கேலர்' நிறுவனத்திடமிருந்து, கிட்டத்தட்ட 9,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல ஆண்டு கால ஆர்டரை இந்நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement