வையாவூர் ராஜகுளம் சாலையில் குதிரைக்கால் மடுவு பாலப் பணி விறுவிறு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வையாவூர் -ராஜகுளம் சாலையில், குதிரைக்கால் மடுவு பாலப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வையாவூர் -ராஜகுளம் சாலை, வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தை இணைக்கும் முக்கிய உள்வட்டச் சாலையாகும்.

காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் இடையே, தென்னேரி, மருதம், கரூர் மற்றும் வையாவூர் கிராமங்களை இணைக்கும் பிரதான வழித்தடமாக உள்ளது.

காஞ்சிபுரம் நகருக்குள் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க, இவ்வழியாக கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த சாலை வழியாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்வோர் ஊத்துக்காடு, புத்தகரம், கரூர் வழியாக இந்த குதிரைக்கால் மடுவை கடந்து செல்ல வேண்டும்.

இங்கு, ஏற்கனவே இருந்த பாலம் சேதமடைந்ததால், புதிதாக பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப். மாதம் 7 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 83 மீ., பாலம் கட்டும் பணி தொடங்கி நடை பெறுகிறது.

இதுவரை 70 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு செப்., மாதம் எஞ்சிய பணிகள் நிறைவடையும் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement