சாலை வளைவில் விபத்தை தடுக்க இரும்பு தடுப்பு அமைக்க கோரிக்கை

தி ருக்கழுக்குன்றம் - ஈச்சங்கரணை செல்லும் பிரதான சாலையில், நடுவக்கரை, நெரும்பூர், வாழத்தோப்பு, லட்டூர், நல்லாத்துார், ஆயப்பாக்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

ஈச்சங்கரணையில் - கருமாரப்பாக்கம் செல்லும் பிரதான சாலையின் ஆபத்தான வளைவில் இரும்பு தடுப்புகள் இல்லாமல் உள்ளது.

இதனால், அதிவேகத்தில் வரும் வாகன ஓட்டிகள், இரவு நேரங்களில் விபத்திற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அசாம்பாவிதம் ஏற்படும் முன் சாலை வளைவில் புதிய இரும்புத் தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கீரா, திருக்கழுக்குன்றம்.

Advertisement