அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றதற்கு எதிர்ப்பு; சபாநாயகரிடம் இபிஎஸ் தரப்பு மனு
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்ற முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் மனு அளித்தனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்பு ஒரு அணி, எஸ்.பி வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு ஒரு அணி என இரண்டு அணியாக செயல்பட்டு வருகின்றனர். இபிஎஸ் தலைமையில் 22 பேர்; முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையிலான அணியில் 25 பேர் உள்ளனர்.
அதிமு.க.,வில் வேலுமணி அணியில் இருந்த, மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார், தாராபுரம் எம்.எல்.ஏ., சத்யபாமா ஆகியோர், ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்தார். இந்த 3 எம்எல்ஏக்கள் ஆளும் கட்சியான த.வெ.க.,வில் ஐக்கியமாகினர்.
இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்ற முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் மனு அளித்தனர். சபாநாயகரை நேரில் சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓஎஸ் மணியன் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
அப்போது அவர்கள் கட்சி தாவல் புகாருக்கு ஆளான எம்எல்ஏக்கள் ராஜினாமாவை எப்படி ஏற்றகலாம் என கேள்வி எழுப்பி உள்ளனர்.
ஐயோ பாவம். உன்னால் ஒன்றும் அவர்களை செய்ய முடியல அந்தோ பரிதாபம். நீ எத்தனை பேருக்கு கெடுவினை செய்திருப்பாய். நியூட்டன் விதி வேலை செய்கிறது. செய்த வினைக்கு எதிர் வினை நடக்கிறது. நாங்கள் அமைதியாகா இருந்து வேடிக்கையை பார்க்கிறோம்.
ராஜினாமா அவர்கள் விருப்பம் இதில் யாரும் தலையிட முடியாது என்று சபாநாயகர் கூறி விட்டார். . ஆடி காட்டில் அம்மியே பறக்குதாம் இலவம் பஞ்சு பழனி நீ பலம் பொருந்திய தீ மு க்கா வே மன்னை கவ்விடுச்சி நீ எம்மாத்திரம்.
பழனிக்கு பேப்பே பேப்பபேப்பே. சதிக்காரனுக்கு யேற்பட போகும் கதி யின் முன்னோட்டம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். தன் வினை தன்னை சுடும் தீவினை மண்டைகணத்தை குறைக்கும்.
இந்த மாதிரி நடவடிக்கைகள் முற்றலாம் முடிவு கட்ட வேண்டும். நங்கள் ஓட்டு போட்டு வெற்றிபெற்ற பிறகு வேறு கட்சிக்கு போவதும் அவ்வளவு நல்லதல்ல. அவர்களை தண்டிக்க வணடும். 20 நாளில் இப்புடி மறைவது நல்லதல்ல. அந்த தொகுதி மக்கள் அவர்களை தண்டிக்க வேண்டும். இது ஒரு நம்பிக்கை துரோகம்.
இதுக தான் தூய சக்தி பத்தி பேசிகிட்டு இருந்தானுக. இப்ப தமிழத்தில் இதுவரை நடக்காத அத்தனை அக்கிரமத்தயும் செய்யறாங்க
அடிப்படை நிலைமை தெரியாத பழனியை என்னவென்பது.
இவருக்கு எல்லாமே தெரியும் ...ஏகாம்பரம் ..
விஜய் ஆட்சியாளர்கள் ஒரு முடிவோடு இருக்கிறார்கள் . எம் எல் ஏ க்களை ராஜினாமா செய்யவைத்து பணம் கொடுத்துஅவர்களின் கட்சியில் சேர்த்துக்கொண்டு மறு தேர்தலில் தனது கட்சிக்காரர்களை நிறுத்தி சொந்த பலத்தில் ஆட்சி நடத்த விரும்பி இந்த சதி செயல்களை மனசாட்சி இல்லாமல் செய்துகொண்டுஇருக்கிறார்கள். இந்த சினிமா கவர்ச்சி மக்கள் திருந்தாதவரை இந்த மாதிரி அசிங்கங்கள் நடக்கும் .
இதற்கெல்லாம் ஒரே தீர்வு, எடப்பாடி ராஜினாமா செய்து வேறொருவருக்கு வழி விடுவதுதான்.
ஏமாத்தினதுக்கு ஏமாத்தினவன் கையிலேயே லெட்டர் குடுத்தா எப்படி?.