தமிழக சட்டசபையில் 4 தொகுதிகள் காலி
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்த நிலையில், மேலும் 3 தொகுதிகள் காலியானதாக சட்டசபை செயலகம் அறிவித்தது. மொத்தம் 4 தொகுதிகள் காலியாக உள்ளன.
தவெக தலைவரான விஜய், அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வேட்பாளராக போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளில் அவர் வெற்றி பெற்றார். முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்னர், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் மே 10ம் தேதி ராஜினாமா செய்தார். இதன் பிறகு அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி கோஷ்டியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள் நேற்று திடீரென தங்கள் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆளும் கட்சியான த.வெ.க.,வில் ஐக்கியமாகினர். இதனால் மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் காலியானதாக சட்டசபை செயலகம் அறிவித்துள்ளது,
தொகுதி காலி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதியாகும். எனவே கூடிய விரைவில் முறையான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட இருக்கிறது. தற்போது தமிழகத்தில் நடந்து கொஞ்ச நாட்களிலேயே 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா செய்தவருக்கு மீண்டும் அந்த தொகுத்தி மக்கள் வாக்களிக்க கூடாது
ECI should stop mid term election across constituencies. Incase the elected candidate passes away the next candidate who has secured more vote should be elected. Resignation from a party and conducting reelection is all atrocious and those candidates ahould be banned from election for the next five years. It is only the public money that is wasted as part of reelection
ஓட்டு போட்ட நாம் கேனப்பய
என்று நினைப்பு ராஜினாமா செய்தவனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரக்கூடாது