பைஜுஸ் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறை; சிங்கப்பூர் நீதிமன்றம்

8

சிங்கப்பூர்: பைஜுஸ் கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.



இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வந்த பைஜுஸ், தற்போது கடுமையான நிதி மற்றும் சட்டச் சிக்கல்களில் சிக்கியுள்ளது. 2022ல் இந்நிறுவனத்தின் மதிப்பு ஒரு லட்சத்து 87 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போதைய நிலைநிறுவனத்தின் மதிப்பு பூஜ்ஜியம் என்று பைஜு ரவீந்திரனே ஒப்புக்கொண்டார்.


1.2 பில்லியன் டாலர் கடன் தொடர்பான சட்டப் போராட்டங்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.


இந்த நிலையில், கத்தார் முதலீட்டு வாரியத்தின் துணை நிறுவனமான 'கத்தார் ஹோல்டிங்ஸ்' தொடர்ந்த வழக்கில், பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


இது தொடர்பாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்; 2024 ஏப்ரல் முதல் பைஜு ரவீந்திரனின் சொத்து விவரங்களை வெளிப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த பல உத்தரவுகளை அவர் தொடர்ந்து மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்றம், பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதம் சிறைத்தண்டனை மற்றும் நீதிமன்ற செலவுத்தொகை குமார் 75 லட்சத்தை செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் உடனடியாக அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Advertisement