தேடல்களை குறைக்காமல் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் வேலை வாய்ப்பு முகாமில் கலெக்டர் பேச்சு

தேனி, மே 29–

தேனி பிஸினஸ் போரம், திரவியம் மகளிர் கல்லுாரி இணைந்து  வேலைவாய்ப்பு முகாம் நடத்தின.

பிஸினஸ் போரத்தின் நிறுவன இயக்குநர் முத்துசெந்தில்குமார் தலைமை வகித்தார். திரவியம் கல்லுாரி தாளாளர் டாக்டர் பாண்டியராஜ் முன்னிலை வகித்தார். தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசியதாவது: நான் அரசு பள்ளி, அரசு கல்லுாரியில் படித்து கடிமான உழைப்பினால் கலெக்டர் பணி கிடைத்தது. இப் பணி கிடைத்த பின்பும் உழைப்பையும், தேடல்களையும் குறைக்காமல் உள்ளேன். எப்போதும் வெற்றிக்கான இலக்கை அடைந்த பின்பு நின்றுவிடாமல் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றார்.

தேனி பிஸினஸ் போரத்தின் நிறுவன இயக்குநர் முத்து செந்தில் குமார் பேசுகையில், ‘ பிஸினஸ் போரம் தொழில் முன்னேற்றம் மட்டுமின்றி சமுதாய முன்னேற்றத்திலும் பங்களிப்பு வேண்டும் என்பது நோக்கம். மாணவர்களின் எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளின் தேவையையும் பூர்த்தி செய்வதுதான் வேலைவாய்ப்பு முகாமின் வெற்றிக்கு காரணமாகும்.  முகாமில்100க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை அளிக்கப்பட்டுள்ளது,’ என்றார்.

தேனி என்.பி.ஆர் ஜுவல்லர்ஸ், ஆர்கோ பில்டர்ஸ். குவாலிட்டி டயக்னஸ்டிக் சென்டர், தேவா கார்ஸ், அரசன் மொபைல்ஸ், வோர்டெக்ஸ் சொலுயுசன், தேனி கல்வி மையம், ரியோ கர்டன்ஸ், மீனாட்சி மார்பிள்ஸ், அகன் பத்திர எழுத்தர், ராகா வெள்ளி மாளிகை, சென்நெட் இன்டர்நெட், ஸ்ரீபவானி டிரேடர்ஸ், அரிஷான் அசோசியேட், எஸ்.ஆர்., ஏஜென்ஸி மற்றும் ஆண்டிபட்டி டைமன் ஏஜென்ஸி கலந்து கொண்டு வேலை வாய்ப்பு அளித்தனர். போரத்தின் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் ராஜேஷ்வரமூர்த்தி, பொருளாளர் ரெங்கராஜன், பிரதீப் செல்லதுரை, பால்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement