வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி சரியானதே: சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு

10

நமது டில்லி நிருபர்



இந்திய தேர்தல் கமிஷனின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) எதிரான வழக்கில் இன்று (மே 27) சுப்ரீம்கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்தது.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) செய்யும் பணி சரியானதே என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில், உயிரிழந்தோர், நிரந்தரமாக புலம்பெயர்ந்தோர், இரு வேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தோர் ஆகியோரை கண்டறிந்து, அவர்களது பெயர்களை நீக்குவதற்காக இந்திய தேர்தல் கமிஷனால் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) பணியை முன்னெடுத்தது.

தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் வந்து விவரங்களைச் சேகரித்து தகுதியற்றவர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து ஏராளமான மனுக்களை அரசியல் கட்சியினர், தனி நபர்கள் மற்றும் சமூக அமைப்புகள் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணை நடந்து வந்தது. அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில் இன்று(மே 27) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் இன்று (மே 27) தீர்ப்பு அளித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:


சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்ற இலக்குடன் நேரடி தொடர்புடையது என்பதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.,) செய்யும் பணி சரியானதே; அந்த பணியில் நாங்கள் திருப்தி அடைகிறோம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.


சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

* வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் திருத்தம், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை உறுதி செய்வதற்கான அரசியலமைப்பு இலக்குடன் நேரடித் தொடர்புடயைது.


* அத்தகைய தேர்தல்கள் வெறும் வாக்குப்பதிவு முறைகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை. மாறாக ஜனநாயக செயல்முறையின் அடித்தளமாக விளங்கும் வாக்காளர் பட்டியல்களின் நேர்மை, துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது.

* கடைசியாக வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் 40 ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பிறகு பல ஆண்டுகளாக நிகழ்ந்த பெருமளவு சேர்க்கைகள், நீக்கங்கள், நகரமயமாக்கல், இடம்பெயர்வு ஆகியவற்றால் வாக்காளர் பட்டியல்களில் இரட்டைப்பதிவு ஏற்பட சாத்தியம் அதிகம். இது போன்ற தேர்தல் ஆணையம் தெரிவித்த காரணங்கள், வாக்காளர் பட்டியலின் அடிப்படை நேர்மையைப் பாதுகாப்பதையே தெளிவான நோக்கமாகக் கொண்டிருந்தன.

* இந்தியத் தேர்தல் ஆணையம் பின்பற்றிய நடைமுறையானது, 1950ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1960ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகள் ஆகியவற்றுக்கு முரணானது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரிக்கிறது.

* அந்த நடைமுறையானது ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்களின் குடியுரிமையை மறுக்கிறது என்ற வாதத்தையும் நீதிமன்றம் நிராகரிக்கிறது.

* இந்தியத் தேர்தல் ஆணையம் பின்பற்றிய நடைமுறையானது, 1950ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் 1960ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகள் ஆகியவற்றுக்கு முரணானது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரிக்கிறது.

* அந்த நடைமுறையானது ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் உள்ள நபர்களின் குடியுரிமையை மறுக்கிறது என்ற வாதத்தையும் நீதிமன்றம் நிராகரிக்கிறது.

* இத்தகைய ஒரு செயல்பாட்டின்போது, ​​வாக்காளர்களை ஆதாரங்களுடன் கூடிய ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்பது, தவறல்ல. ஏற்கனவே உள்ள பதிவுகளை மீண்டும் உறுதிப்படுத்தவும், தேவைப்பட்டால் திருத்த முற்படுவதுமான ஆணையத்தின் வழிமுறையை தான் அது பிரதிபலிக்கிறது.

* வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக, குடியுரிமை தொடர்பான கேள்விகளை ஆராய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது.

* எனினும் தேர்தல் ஆணையத்தின் எதிர்மறையான முடிவு, அந்த நபர் இந்தியக் குடிமகன் அல்ல என்ற உறுதியான முடிவுக்கு வழிவகுக்காது.

* தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கு மட்டுமே. இவ்வாறு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement