ஊருணி கரையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிய கிராம மக்கள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சடையனேரி கிராமத்தில் ஊருணி கரையில் உள்ள சீமைக்கருவேலம் மரத்தை சொந்த செலவில் கிராம மக்கள் மணல் அள்ளும் இயந்திரத்தில் அகற்றினர்.

சடையனேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். சிக்கல் செல்லும் ரோட்டோரத்தில் ஊருணி உள்ளது. இங்கு பருவமழை காலத்தில் தண்ணீர் தேக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சடையனேரி, குமாரக்குறிச்சி, ராமலிங்கபுரம், கோகொண்டான் உள்ளிட்ட அதை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஊருணி கரையில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி இருந்தது. இதனால் விஷப்பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறி இருந்தது. இதையடுத்து கிராம மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றப்படவில்லை. இதனால் கிராம மக்கள் சொந்த பணத்தில் ஊருணி கரையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரத்தை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அரசு உதவியை எதிர்பார்க்காமல் சொந்தமாக கிராம மக்கள் பணத்திலேயே ஊருணி கரையை துாய்மைப்படுத்திய கிராம மக்கள் பலர் பாராட்டினர்.

Advertisement