சரக்கு வாகனம் ஆம்புலன்சில் மோதி விபத்து: ஒருவர் பலி
சிவகங்கை, மே 28-–
சிவகங்கையில், மதுரை முக்கில் ஆம்புலன்சும், சரக்கு வாகனமும் மோதியதில், ஆம்புலன்சில் வந்தவர் பலியானார்.
காளையார்கோவில் தென்றல்நகர் மலைராஜ் 55. இவர் நேற்று அதிகாலை காயாஓடை அருகே விபத்தில் சிக்கினார். தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு சென்றனர். நேற்று காலை 5:40 மணிக்கு சிவகங்கை மதுரைமுக்கு பகுதியில்சென்றபோது, சரக்கு வாகனம், ஆம்புலன்சில் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்தவிபத்தில் ஆம்புலன்சில் வந்த மலைராஜ் காயத்துடன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்ததில், இறந்தவிட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளனர். சிவகங்கை நகர் போலீசார் சரக்கு வாகன டிரைவர் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை செல்வம் 46 மீது வழக்கு பதிந்தனர்.
///
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement