சாலையில் பள்ளத்தால் விபத்து அபாயம்

கிள்ளை: சர்வீஸ் சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்–நாகை தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அடுத்த சி.முட்லுார் மண்டபத்தில் இருந்து அப்பகுதி

அரசு கலைக்கல்லுாரி வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தின் கீழே கிள்ளை மற்றும் பிச்சாவரம்  செல்வதற்கு சப்வே, சர்வீஸ் சாலை இருபுறமும்  போடப்பட்டது.

சி.முட்லுார் மண்டபத்தில், சர்வீஸ் சாலை அமைக்க அப்போது பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணிகள் முடிந்து சில ஆண்டுகளாகியும் மண் அப்படியே உள்ளது. தற்போது, பள்ளத்தில் செடி, கொடிகள் முளைத்து பள்ளமே இருப்பதே தெரியாமல் உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:

மழைக்காலங்களில், பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி சாலை எது, பள்ளம் எது தெரியாத நிலை ஏற்படுகிறது. பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது தவறி பள்ளத்தில் விழுந்துவிடுகின்றன. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இ்வவாறு அவர்கள் கூறினர்.

Advertisement