பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் விஜய்; தமிழக நலன்கள் குறித்த கோரிக்கை மனு சமர்ப்பிப்பு

11

புதுடில்லி: டில்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் இன்று சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் நலன்கள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அவர் அளித்தார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அரசு முறை பயணமாக முதல்வர் விஜய் இன்று தலைநகர் டில்லி புறப்பட்டார். இன்று காலை 10 மணி அளவில் தனி விமானம் மூலம் அவர் டில்லி சென்றார்.

தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்றார். அங்கு அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் மாலை பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்தார். புதியதாக கட்டப்பட்ட பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

Tamil News
சந்திப்பின் போது தமிழகத்தின் பல்வேறு நலன்கள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை அவர் பிரதமரிடம் அளித்தார். 10 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நீடித்தது. முதல்வராக பதவியேற்ற பின்னர், பிரதமர் சந்திப்பது என்பது மரபாகும். அதன்படி இன்றைய சந்திப்பானது நிகழ்ந்து இருக்கிறது.

முன்னதாக, 2014ம் ஆண்டு கோவையில் மோடியை விஜய் சந்தித்து பேசினார். அதன் பிறகு பிரதமரான மோடியை, முதல்வரான விஜய் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் ஊடே, 2014ம் ஆண்டு இருவரும் சந்தித்து பேசிய போட்டோக்கள் இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.


நிதியமைச்சருடன் சந்திப்பு

தொடர்ந்து இன்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் விஜய் சந்தித்தார். தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

Advertisement