மக்கள் தொகையில் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு; மத்திய அரசின் நடவடிக்கைக்கு சசி தரூர் ஆதரவு
நமது நிருபர்
மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய குழு அமைத்து மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் அதனால் ஏற்படும் இயற்கைக்கு மாறான மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்ய, உயர்நிலை குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மாறி வரும் மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் சட்டவிரோத ஊடுருவல்கள் குறித்து அரசியல் ரீதியான விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.
இந்த நடவடிக்கை முக்கியமான முன்னேற்றம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அது ஒரு மிக முக்கியமான முன்னேற்றம்; பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு வகையான மாற்றங்கள் நிகழ்கின்றன.
மேலும் அதன் அரசியல் தாக்கங்கள் குறித்து நாம் தீவிரமாகப் பேசுவதற்கு முன்பு, நமது வசம் இருக்கும் புள்ளிவிவரங்களை குறித்து புரிந்துகொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
துல்லியமான உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் வழங்கும் எந்தவொரு யோசனைக்கும் நான் ஆதரவளிப்பேன். முழுமையற்ற தரவுகளாக இருந்தால், தேவையற்ற அரசியல் சர்ச்சைகளை உருவாக்குவார்கள். நம்மிடம் தரவுகள் இருப்பது முக்கியம்.
இயற்கைக்கு மாறான மக்கள்தொகை மாற்றம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பதன் அரசியல் தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும், இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.
சந்தேகத்திற்கு இடம் இல்லாத ஆவணங்கள் மூலம் ஓட்டு, குடியுரிமை.. சந்தேகத்திற்கு உட்படும் ஆவணங்கள் மூலம் அந்நிய அகதி அந்தஸ்து. ஆவணம் இல்லை என்றால் கள்ள குடியேறிகள். முழு விவரங்களுடன் தனி பதிவேற்றம். இதில் உள்ளாட்சி பிறப்பு சான்று மூலம், மாநில நிர்வாகம் உள்ளாட்சி பதிவு மற்றும் கல்வி, வேலை நிறுவனங்கள் சான்று. மத்திய அரசு தபால் நிலையம் மூலம் தனித்து விவரம் சேகரிக்க வேண்டும். இவை மூன்றும் பொருந்த வேண்டும்.
கான் கிராஸ் கட்சியில் நல்லவர்களும் இருக்கிறார்கள் போல் தெரிகிறது.... உண்மையை உரக்க சொன்னதற்க்கு..... வாழ்த்துக்கள்.
அரசியல் தாக்கங்கள்? கள்ளக்குடியேறிகளான சிறுபான்மையினரின் ஓட்டுக்களை மட்டுமே நம்பும் கட்சிகளுக்கு ஆப்பு. குறிப்பாக காங்கிரஸ், சமாஜ்வாதி, த்ருணமூல், முஸ்லீம் கட்சிகள் , நம்ம திருட்டு திராவிடக் கட்சி