மாநில தடகள சாம்பியன்ஷிப் நெல்லையில் நாளை துவக்கம்

சென்னை: தமிழகத்தின் முன்னணி தடகள வீரர் - வீராங்கனையர் பங்கேற்கும், மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, நாளை துவங்குகிறது.

தமிழ்நாடு தடகள சங்கம், நெல்லை மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும், 98வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில், நாளை துவங்கி நாளை மறுநாள் வரை நடக்கிறது.

இந்த போட்டி, ஜூன் மாதம் புவனேஸ்வரில் நடைபெற உள்ள தேசிய தடகள போட்டிக்கான தேர்வாக அமைகிறது.

மேலும், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான தேர்வு முகாமாக அமையும்.

ஓபன் தேசிய தடகள சாம்பியன்ஷிப்பிற்கும், இந்த போட்டி முக்கிய தகுதி சுற்றாக கருதப்படுகிறது.

இதனால், கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலம் முழுதும் இருந்து 1,200க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.

Advertisement