தளிர் கீரை உற்பத்தி பயிற்சி40 பேருக்கு சான்றிதழ் வழங்கல்



நாமக்கல்:நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுத்தரவும் பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்படுவது வழக்கம். இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் பயனடைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மைக்ரோ கிரீன்ஸ் எனப்படும் தளிர் கீரை உற்பத்தி குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நேற்று நடந்தது.

இப்பயிற்சியில், தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப வல்லுநர் இளவரசன் பேசியதாவது:
'மைக்ரோ கிரீன்ஸ்' எனப்படும் தளிர் கீரைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. இதை வளர்க்கும் முறைகள் மிகவும் எளிதானவை. தற்போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இக்கீரைகளுக்கு அதிக தேவை உள்ளது. எனவே, இளைஞர்கள் இதனை தொழிலாக தொடங்கி ஏற்றுமதி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இப்பயிற்சி வகுப்பில் நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், தொழில் முனைவோர், பள்ளி மகல்லுாரி மாணவ, மாணவியர் என, 40-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்குனர் செல்வராஜ் தலைமை தாங்கிப் பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில், வேளாண் அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் சசிகலா முன்னிலை வகித்து உரையாற்றினார்.

Advertisement