பொதுமக்களின் தாகம் தீர்க்ககுழாய்கள் அமைக்க கோரிக்கை

ப.வேலுார்:ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே, 10வது வார்டு பகுதியான, ப.வேலுார் டவுன் பஞ்.,க்கு சொந்தமான, 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அப்பகுதியை சுற்றி காய்கறி, செல்போன், பேக்கரி, பாஸ்புட் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் நிலத்தடி நீரை மின் மோட்டார் மூலம் டேங்கிற்கு ஏற்றி தண்ணீரை குடிநீராக மாற்றியுள்ளனர்.


சுற்று வட்டார பகுதி மக்கள் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த தண்ணீர் மிகவும் உப்பு தன்மை மிகுந்ததாக காணப்படுகிறது. அதனால் பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்த முடிவதில்லை.அதனால், ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பிரதான காவிரி குடிநீர் பைப் செல்கிறது. அவ்விடத்தில் சாலையின் ஓரமாக பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கு குடிநீர் பைப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கையை மனுவாக டவுன் பஞ்., அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். மேலும், 10வது வார்டு கவுன்சிலர் தேன்மொழி அவ்விடத்தில் காவிரி குடிநீர் பைப்பு அமைக்க பலமுறை மன்ற கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், டவுன் பஞ்., அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொது மக்களின் நலன் கருதி அவ்விடத்தில் குடிநீர் பைப் அமைக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த ஆலோசனை டவுன் பஞ்.,க்கு நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement