காங்கோவில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ்; மருந்துப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவிக்கரம்!

4

நமது நிருபர்



காங்கோவில் தீவிரமடைந்து வரும் எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா அவசரகால மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது.

காங்கோ, உகாண்டா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில், 'எபோலா' உயிர்கொல்லி வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி, உலக சுகாதார நிறுவனம், பிற நாடுகளை எச்சரித்து உள்ளது. இந்த தொற்று பாதிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலவ் அளிக்காமல் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள எபோலா நோய்ப் பரவலுக்கு எதிரான காங்கோவின் போராட்டத்திற்கு உதவும் வகையில் இந்தியா அவசர மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது. நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சைக்கான பொருட்கள் மற்றும் நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டுப் பொருட்கள் பெறப்பட்டதை ஆப்ரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் உறுதிப்படுத்தியுள்ளது; இவை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவாக விநியோகிக்கப்படும்.
எபோலா நோய்க்கு எதிரான தொடர் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்காக, இந்திய அரசும், மக்களும் தாராளமாக நன்கொடையாக அவசரகால மருந்துப் பொருட்கள் வழங்கியதற்கு ஆப்ரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் நன்றி தெரிவித்தது. அந்த அமைப்பு உயிர்களைப் பாதுகாப்பதற்கும் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இந்தியா அளித்துவரும் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகிறது என தெரிவித்துள்ளது.

Advertisement