ரோபாடிக் மூலம் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை கே.ஜி. மருத்துவமனையில் துவக்கம்
கோவை: கே.ஜி. மருத்துவமனையில் ரோபாடிக் தொழில்நுட்பத்தில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது.
கோவை கே.ஜி மருத்துவமனையில் ரோபாடிக் தொழில்நுட்பத்தில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு துவக்க விழா, ரேஸ்கோர்ஸில் உள்ள தாஜ் விவான்டா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தனர். கே.ஜி. மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவச்சலம் வரவேற்புரையாற்றினார்.
கே.ஜி. மருத்துவமனை நிறுவன தலைவர் டாக்டர் பக்தவச்சலம் பேசுகையில், தொழில்நுட்பம் இல்லாமல் மருத்துவம் இல்லை. கடந்த 2 ஆண்டுகளாக ரோபாடிக் அறுவை சிகிச்சை செய்கிறோம். என் அப்பாவுக்கு மூட்டு மாற்றுவதற்காக ஜெர்மனி சென்றோம். அந்த அறுவை சிகிச்சை இப்போது இங்கு செய்கிறோம். மற்ற மருத்துவமனைகளை விட குறைவான கட்டணத்தில் அறுவை சிகிச்சை செய்கிறோம். மருத்துவத்தில் சென்னைக்கு அடுத்து கோவை தொழில்நுட்பத்தில் மேம்பட்டுள்ளது,என்றார்.
நடிகர் சிவக்குமார் பேசுகையில், எங்கள் கிராமத்தில் முதன்முதலில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவன் நான் தான். எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜய் ஆகிய 4 முதல்வர்களுடன் நடித்துள்ளேன், என்றார். கம்பராமாயணம் மற்றும் திறக்குறள் பாடி விளக்கமளித்தார்.
மேலும்
-
கிரைம் கார்னர்: சென்னை
-
சித்தானந்த சுவாமி கோவிலில் இன்று 189ம் ஆண்டு குரு பூஜை
-
மணக்குள விநாயகர் கோவிலில் அக்னி நட்சத்திர பூர்த்தி பூஜை
-
மாநில தடகள சாம்பியன்ஷிப் நெல்லையில் நாளை துவக்கம்
-
மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் திருக்குறள் புத்தகம் வழங்கி விழிப்புணர்வு
-
இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு