வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் மண்சாலை தார் சாலையாக போடப்படுமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி பெருவங்கூர் கிராம எல்லையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை உள்ளிட்ட 4 தாலுகாக்கள் உள்ளது. 

இதனால் ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் புதுப்பிப்பு, பர்மிட் போன்ற பல்வேறு காரணங்களுக்காக வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்திற்கு வாகனங்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. வயல் வெளிப்பகுதிகளுக்கு இடையே மண் சாலையாக இருப்பதால் மழைக் காலங்களில் குண்டும், குழியுமாகி, தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்லக்கூடிய மண் சாலையை தார்சாலையாக மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Advertisement