48 மணி நேரத்தில் 2வது தாக்குதல் நடத்திய அமெரிக்கா; பதிலடி தீவிரமாக இருக்கும் என ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான்: போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ள ஈரான், பதில் நடவடிக்கை இன்னும் தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் துவங்கி, நேற்றுடன் 90 நாட்களாகியுள்ள நிலையில், அங்கு தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்டவை தொடர்பாக அமைதி பேச்சு நடத்துவது தொடர்பான முயற்சிகள் நடந்து வருகிறது. இரு தரப்பும் கடும் நிபந்தனைகள் விதித்து வருவதால், இரு தரப்பு பேச்சு நடப்பது இழுபறியாக உள்ளது.
இந்நிலையில், ஈரானின் ஈரான் புரட்சிகர காவல் படையினர், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கடல் கண்ணி வெடிகளை பதிக்க முற்பட்டதாக கூறி இரண்டு படகுகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தின. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் அமைந்துள்ள ஈரானின் முக்கிய துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் பகுதியில் உள்ள ஈரான் ராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் நடந்த 48 மணி நேரத்துக்குள் மீண்டும் பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஹார்முஸ் ஜலசந்தியை நோக்கி ஈரான் ஏவிய நான்கு ட்ரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதுடன், ஐந்தாவது ட்ரோனை ஏவ தயாராக இருந்த போது, கட்டுப்பாட்டு மையத்தை அமெரிக்கா தாக்கி அழித்தது.இதையடுத்து, தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் ஒன்றின் மீது பதில் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
எங்குள்ள ராணுவ தளம் தாக்கப்பட்டது என்பது குறித்த தகவலை ஈரான் வெளியிடவில்லை. இருப்பினும், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான குவைத், தங்கள் நாட்டை குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்ததாக தெரிவித்துள்ளது. இத்தாக்குதல், பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கான நேரடி பதிலடி என்றும், அமெரிக்காவின் அடுத்தகட்ட ராணுவ தாக்குதல்கள் எதற்கும் மிக கடுமையான பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
@block_G@
இந்த பதற்றத்துக்கு இடையே நடந்த அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது: அமெரிக்காவில் ஏற்படும் உள்நாட்டு அரசியல் அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் காரணமாக அமெரிக்கா தங்களுக்கு பணிந்து விடும் என்ற நோக்கில், அமைதி ஒப்பந்தத்தை ஈரான் தாமதப்படுத்த முயற்சி செய்து வருகிறது.
அமெரிக்காவில் தேர்தல் நடக்க உள்ளது; அதனால் நான் பணிந்து விடுவேன் என்று நினைக்கிறார்கள். ஆனால், எனக்கு தேர்தல் குறித்து எந்தவொரு கவலையும் இல்லை. அரசியல் லாபத்துக்காக ஈரான் அமைதி ஒப்பந்தத்தை அவரசப்பட்டு முடிக்க மாட்டேன். அமெரிக்கா தொடர்ந்து கடுமையான நிலைப்பாட்டை எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.block_G
மீண்டும் போர் வலுவடைகிறது. இதனால் பாதிக்கப்படுவது மக்கள். போரை துவக்கிவிட்டு அந்த நாட்டு தலைவர்கள் ஜாலியாக மிகுந்த ராணுவ பாதுகாப்புடன் அவர்கள் மாளிகையில் இருப்பார்கள். அவதிப்படுவது மக்கள். இந்த டிரம்ப் மற்றும் ஈரான், இஸ்ரேல் நாடு தலைவர்களுக்கு பொழுது போகவில்லையென்றால் உடனே போரில் இறங்கிவிடுவார்கள். மக்களின் வேதனை அவர்களுக்கு புரிவதில்லை.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு நம்பிக்கை க்கு உரிய ஆள் இல்லை, சொல்லுவது ஒன்று, செய்வது ஒன்னு. உலக போர் ஆரம்பிக்காமல் விட மாட்டார், இவர் போல மனா நலம் பாதிக்கப்பட்ட ஒருத்தரை தேனிர்த்தெடுத்த அமெரிக்க அதற்கான விலையை கொடுக்கட்டும். அப்போ தான் புத்தி வரும்.
வினாடிக்கு வினாடி ஒருப் பேச்சுஇவர் பதவிக் காலத்துக்குள் உலகை ஒரு வழி செய்து விடுவார் போலத் தெரிகிறது.மேலும்
-
நடிகர் அஜித் தாயார் மோகினி மணி காலமானார்
-
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை விரைவுபடுத்தணும்: தவெக அரசுக்கு பாஜ வலியுறுத்தல்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்; அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி
-
ஈரான் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்: அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
-
வெற்றி தரும் விசாகன் மே 30 - வைகாசி விசாகம்