த.வெ.க., சார்பில் அன்னதானம்
மேட்டுப்பாளையம்: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, த.வெ.க., சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, த.வெ.க., கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். நகர் செயலாளர்கள் காஜா, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. கவுன்சிலர் சுனில்குமார், காரமடை நகர, ஒன்றிய, சிறுமுகை பேரூராட்சி செயலாளர்கள் உட்பட கட்சியினர் பங்கேற்றனர்.
* அன்னுாரில், அரசு மருத்துவமனை முன், தெற்கு ஒன்றிய த.வெ.க., சார்பில், 250 பேருக்கு காளான் பிரியாணி வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார் வழங்கினார். முன்னதாக காலையில், அன்னுார் மன்னீஸ்வரர் கோவில் முன், அன்னுார் நகர த.வெ.க., சார்பில், நகரச் செயலாளர் கிருஷ்ணதாஸ் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
நடிகர் அஜித் தாயார் மோகினி மணி காலமானார்
-
உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தை விரைவுபடுத்தணும்: தவெக அரசுக்கு பாஜ வலியுறுத்தல்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
ரூபாய் நோட்டுகளில் புதிய பாதுகாப்பு அம்சங்கள்; அறிமுகம் செய்கிறது ரிசர்வ் வங்கி
-
ஈரான் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும்: அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்
-
வெற்றி தரும் விசாகன் மே 30 - வைகாசி விசாகம்