புத்துயிர் பெறுமா பழைய மருத்துவமனை கட்டடம்
சிங்கம்புணரி, மே 29–-
சிங்கம்புணரியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மருத்துவமனை கட்டடத்தை சீரமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்குள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் 1952 இல் குண்டு கற்களால் கட்டப்பட்ட பழமையான கட்டடம் உள்ளது. புதிய கட்டடம் கட்டப்பட்ட நிலையில் இது பயன்பாடு இன்றி கைவிடப்பட்டது. தற்போது மருத்துவ ஊழியர் குடியிருப்பு, பொதுமக்கள் தங்கும் அறை உள்ளிட்டவற்றிற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த பழைய கட்டடத்தை சீரமைத்தால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என்கிறார்கள் பொறியாளர்கள். ஏற்கனவே மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ்., ஆகியோர் இக்கட்டடத்தை மீண்டும் பராமரித்து மறு பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினர். ஆனாலும் அதற்கு பிறகு எந்த திட்டமிடலும் இல்லாமல் கட்டடம் வீணாகி வருகிறது. எனவே இக்கட்டடத்தை மறு சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும்
-
அனந்தீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேரோட்டம்
-
குட்டையில் கார் கவிழ்ந்து விபத்து
-
வடலுார் அருகே பெண் கொலை ? கழுத்து அறுபட்ட நிலையில் சடலம் மீட்பு
-
டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
-
புதிய மாவட்ட செயலாளர் பக்கம் வந்தால் ‘பதவி’ ‘ஆபர்’ கொடுத்து அழைக்கும் மாஜி எம்.எல்.ஏ., அ.தி.மு.க., நிர்வாகிகள் குழப்பம்
-
திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் தங்க காகம் வாகனத்தில் சுவாமி வீதியுலா