போலீஸ் செய்திகள்

டூவீலரில் வைத்திருந்த பணம் மாயம்

சிவகாசி : தேவர்குளம் ரோடு குரு காலனியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் 41. இவர் சிவகாசியில் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தன்னுடன் வேலை பார்த்து இளங்கோவை அழைத்துக் கொண்டு கம்பெனிக்கு சொந்தமான டூவீலரில் வசூலுக்கு சென்றார். டூவீலரில் இருந்த பெட்டியில் வசூல் பணம் ரூ. 2 .41 லட்சத்தை வைத்து விட்டு தட்டாவூரணியில் உள்ள கடைக்கு வசூலுக்கு சென்றார். மீண்டும் வந்து பார்க்கையில் டூவீலர் மாயமானது . தொடர்ந்து டூ வீலரை தேடுகையில் விளாம்பட்டி விலக்கில் டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதில் வைத்திருந்த பணம் திருடப்பட்டிருந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

----

வாலிபர் பலி

சிவகாசி : ஆலமரத்துப்பட்டி ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் வேல்முருகன் 35. மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் தனது வீட்டில் மூர்ச்சை அடைந்து கிடந்தார். திருத்தங்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

----

தாய் குழந்தையுடன் மாயம்

சிவகாசி : சாட்சியாபுரம் ஆயில் மில் காலனியைச் சேர்ந்தவர் யுவராஜா மனைவி திவ்யா 24. இவர்களுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. திவ்யா கணவரை மூன்று ஆண்டுகளாகப் பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் திவ்யா தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்ட போது நானும் எனது மகளும் பத்திரமாக உள்ளோம் என கூறியுள்ளார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

-----

பள்ளி மாணவி மாயம்

சிவகாசி : திருத்தங்கல் பழைய பால் பண்ணை தெருவை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 1 முடிந்து பிளஸ் டூ செல்ல உள்ளார். இவர் விடுமுறையில் தனது தாத்தா வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

----

பெண்ணுக்கு அடி

சிவகாசி : கொங்கலாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சசிகலா 31. இவரது தந்தை ஐந்து நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரியிடம் உன் மகன் என் பேத்தி கூட சேர்ந்து விளையாடக்கூடாது என தகாத வார்த்தை பேசி அடித்துள்ளார். இது குறித்து டவுன் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பரமேஸ்வரி, மீனா, உள்ளிட்ட சிலர் சசிகலாவை தகாத வார்த்தை பேசி அடித்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

----

Advertisement