தற்கொலை

தொண்டி:

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்குட்டி 60. அன்றாட கூலி வேலை செய்து வந்தார். தொண்டி கடற்கரை சாலையில் உள்ள ஒரு வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதில் கவலையடைந்த கிருஷ்ணன்குட்டி நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர். 

Advertisement