மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
திருவள்ளூர்: ''பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை, உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, திருவள்ளூர் கலெக்டராக நேற்று பொறுப்பேற்ற கவிதா தெரிவித்தார்.
திருவள்ளூர் கலெக்டராக இருந்த பிரதாப், கன்னியாகுமரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக, சென்னை பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு இணை மேலாண் இயக்குநராக இருந்த கவிதா நியமிக்கப்பட்டார்.
அவர், நேற்று மாலை, திருவள்ளூரின் 25வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின், அவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டம், நகர்ப்பகுதி மற்றும் ஊரக பகுதிகளை உள்ளடக்கி உள்ளதால், இரண்டு பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கும், என் மனசாட்சியுடன் பணிபுரிவேன். பொதுமக்களின் பிரச்னைகள் மற்றும் குறைகளை தெரிவிக்க, மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அவற்றில், தங்களின் நியாயமான குறைகளை தெரிவிக்கலாம்.
அக்குறைகளை, உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில், கிராம பகுதிகள் அதிகம் உள்ளதால், ஆவின் நிர்வாகத்திற்கு பால் கொள்முதல் பெற, சிறப்பு கவனம் செலுத்துவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதிய கலெக்டருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் மற்றும் வருவாய் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை