தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
திருத்தணி: தெக்களூர் பகுதியில், கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய் யாததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலை கைவிட மறுத்ததால், போலீசார் பொதுமக்களை கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றிய போது, கிராம மக்கள் அ னைவரும், பேருந்தை சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி ஒன்றியம், சூர்யநகரம் ஊராட்சிக்குட்பட்டது தெக்களூர் காலனி. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை காலனி மக்கள், 100க்கும் மேற்பட்டோர், 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து, திருத்தணி - பொதட்டூர்பேட்டை மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
தகவல் அறிந்ததும், திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.
அப்போது, மக்கள் மின் மோட்டார் பழுது மற்றும் மின் கம்பங்கள் சேதம் போன்றவற்றால், 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யாததால், தனியார் டிராக்டர் மூலம் கொண்டு வரும் தண்ணீரை, பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம் என, ஆவேசமாக கூறினர். ஒரு கட்டத்தில், சமரசம் செய்தும் பயனில்லை என எண்ணிய போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, அரசு பேருந்தில் ஏற்றினர்.
தகவல் அறிந்ததும், காலனி பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர், அரசு பேருந்தை சிறைப்பிடித்தனர். பின், கைது செய்தவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் தான், பேருந்திற்கு வழிவிடப்படும் என கோஷம் எழுப்பினர்.
பி ன், கைது செய்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட பின், மறியலை அப்பகுதி மக்கள் கைவிட்டனர். இதனால், அங்கு இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவ ரத்து பாதிக்கப்பட்டது.
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை