மனித --- விலங்கு பிரச்னை: அதிகாரிகள் ஆலோசனை
கூடலுார்: - மனித -- விலங்கு மோதல் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, ஆலோசனைக் கூட்டம், கூடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்து பேசுகையில்,''காட்டு யானை தாக்கி சிறுவன் உயிரிழந்த பாக்னா பகுதியில், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசுத்துறை அதிகாரிகள் செய்து முடித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அப்பகுதியில் கண்காணிப்பு பணியை வனத்துறை தீவிரப்படுத்துவதுடன், கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்வதுடன், சகோதரருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சக்கர நாற்காலி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் இரவில் தனியாக செல்வதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.
கூட்டத்தில், எம்.எல்.ஏ., திராவிடமணி, நீலகிரி எஸ்.பி., பிருந்தா, டி.எப்.ஓ., தேவராஜ், ஆர்.டி.ஓ., குணசேகரன், டி.எஸ்.பி., வசந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தெலுங்கானாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஒத்துழைப்பு; பிரதமர் மோடி உறுதி
-
சிபிஎஸ்இ விடைத்தாள் சர்ச்சை விவகாரம்; விளக்கம் கோரியது மத்திய அரசு
-
'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'
-
தெக்களூரில் குடிநீர் கேட்டு மக்கள் மறியல்; போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு
-
மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: கலெக்டர் உறுதி
-
மொட்டை அடிக்க பணம் வசூலித்தால் நாவிதர்களின் ஊக்கத்தொகை நிறுத்தம்; திருத்தணி கோவில் இணை ஆணையர் எச்சரிக்கை