'கல்வியில் சிறந்து விளங்கினால் தான் உயர்ந்த பதவிகளை அடைய முடியும்'

திருத்தணி: “கல்வியில் சிறந்து விளங்கினால் தான், உயர்ந்த பதவிகளைஅடைய முடியும்,” என, முன்னாள் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் காசிவிஸ்வநாதன் அறிவுறுத்தினார்.

திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கடந்த 2025 - 26ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருத்தணி வட்டார கல்வி அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு, நேற்று பாராட்டு விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் எஸ்.பாலாஜி தலைமை வகித்தார்.

இதில், தளபதி கே.விநாயகம் கல்வி குழுமத்தின் தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான கிருஷ்ணசாமி, தமிழக டி.என்.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் காசிவிஸ்வநாதன், திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபம் திமான் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில், ௧௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ - மாணவியர், பாராட் டி கவுரவிக்கப் பட்டனர்.

பின், முன்னாள் டி.என்.பி.எஸ்.சி., தலைவர் காசிவிஸ்வநாதன் பேசியதாவது:

மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து, பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

கல்வியில் சிறந்து விளங்கினால் தான், மாணவர்கள் உயர்ந்த பதவிகளை அடைய முடியும். கல்வியுடன் தொழிற்கல்வி கற்றால், எளிதாக அரசு பணியில் சேரலாம். ஆகையால், மாணவர்கள் கல்வியுடன் தொழிற்கல்வி சேர்ந்து படித்தல் அவசியம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், பள்ளியின் முதல்வர் பாலாஜி, பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement