உழவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நிலத்தை உழவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்தனர். அதன் பிறகு ஒரு சில விவசாயிகள் மிளகாய், பருத்தி, சிறுதானியம் விவசாயம் செய்தனர். கிராமங்களில் போதிய மழையின்றி நெற்பயிர்கள் கருகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

வேறு வழியின்றி கூடுதல் பணம் செலவு செய்து அறுவடை இயந்திரம் மூலம் நெற்பயிர்களை அறுவடை செய்தனர். நடப்பாண்டில் செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். தற்போது கிராமங்களில் வயலை தரிசாக விடக்கூடாது என்பதற்காக அறுவடை செய்யப்பட்ட வயலில் டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

Advertisement