கம்பத்தில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்

கம்பம், ஜூன் 1---–

கம்பத்தில் சுகாதாரத்துறை சார்பில் இலவச புற்று நோய் கண்டறியும் முகாம், புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கம்பம் இலாஹி ஓரியண்டல் பள்ளியில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமிற்கு பெரியகுளம் அரசு மருத்துவமனையின் புற்றுநோய் தடுப்பு சிறப்பு டாக்டர் பாரதி தலைமை வகித்தார்.பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேர்களுக்கு மெமோகிராம் பரிசோதனை மேற்கொள்ள கம்பம், தேனி அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.முன்னதாக புற்று நோய் என்றால் என்ன , அதனை எவ்வாறு தடுக்கலாம், நோய் பாதித்த அறிகுறிகள், சிகிச்சை முறைகள், நோய் காரணிகள் உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டது.

Advertisement