வீடு புகுந்து 9 பவுன் தங்க நகை திருட்டு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிக்கலம்பாளையத்தில், வீடு புகுந்து நகை திருடிய நபரை போலீசார் தேடுகின்றனர்.

கிணத்துக்கடவு, சிக்கலம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 38, ஆட்டோ மொபைல் இன்ஜினியர். இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.

வீட்டில் இருந்த இவரது அம்மாவும் கோவிலுக்கு சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த போது, வீட்டு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவை உடைத்து அதிலிருந்து, 9 சவரன் தங்க நகைகளை திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை திருடியவரை தேடி வருகின்றனர்.

Advertisement