காவல்பட்டியில் சுடுகாடு பிரச்னை: சடலத்துடன் மக்கள் போராட்டம்
பொன்னேரி:காவல்பட்டியில் இருதரப்பினர் இடையே இருந்து வரும் சுடுகாடு பிரச்னையில், சடலத்துடன் ஒருதரப்பு மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி அடுத்த காவல்பட்டி கிராமத்தில், இருதரப்பினருக்கு இடையே சுடுகாடு தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று ராஜேஸ்வரி, 78, என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார்.
அவரது இறுதி சடங்கிற்காக, சடலத்துடன் உறவினர்கள் பிரச்னைக்குரிய சுடுகாட்டிற்கு சென்றபோது, மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலையை ஒட்டி உள்ள இந்த சுடுகாட்டில் சடலங்களை எரிக்கும்போது துர்நாற்றம் வீசுவதாகவும், இரவு நேரங்களில் குழந்தைகள் அச்சம் அடைவதாகவும், இந்த சுடுகாட்டை வேறு பகுதிக்கு மாற்றவேண்டும் எனவும், அவர்கள் கூறினர்.
அதேசமயம், சடலத்துடன் வந்தவர்களும், பொன்னேரி - பழவேற்காடு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல தலைமுறைகளாக இங்கு தான் சடலங்களை எரிக்கிறோம். சுடுகாடு அருகே சாலையை அமைத்துவிட்டு, எதிர்தரப்பினர் பிரச்னை செய்வதாகவும் கூறினர்.
இரு தரப்பினரிடமும், பொன்னேரி உதவி கமிஷனர் ராஜசேகரன், இன்ஸ்பெக்டர் தமிழன்பன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
இருதரப்பு கிராம மக்கள், அதிகாரிகள் பங்கேற்கும் சமாதான கூட்டம் நடத்தி, இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு ஏற்படுத்தப்படும் என, அப்போது அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அதையடுத்து, இருதரப்பினரும் போராட்டத்தை கைவிட்டனர். இறந்த மூதாட்டியின் உடல், அதே சுடுகாட்டில் இறுதி சடங்கு செய்யப்பட்டது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும்
-
மரக்கன்றுகள் நட்டு எஸ்.ஆர்.எம்., மாணவர்கள் விழிப்புணர்வு
-
கருடசேவையி்ல் காஞ்சி வரதராஜர்
-
அஞ்சூரம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
-
கூடலுார் ஏரிக்கரை சாலையில் 'கரணம் தப்பினால் மரணம்'
-
முதல்வர் விஜய் நாளை திருச்சி செல்கிறார் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பங்கேற்பு
-
விவசாய நிலத்தை வீட்டுமனையாக மாற்ற அடாவடி திருக்கழுக்குன்றம் ஏரி பகுதியில் அமைக்கப்பட்ட சாலையால் சர்ச்சை